சர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் : ஈரான் தலைவர் எச்சரிக்கை 


சர்வதேச நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடும் முடிவை எடுக்கும்படி ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானியிடம், அந்நாட்டின் தலைவர் அயதுல்லா கொமேனி வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் கைவிட்டதுடன், புதிதாக பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும், ஈரானு‌டன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்தார். எனினும், இந்த உடன்பாட்டை காப்பாற்ற ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன.

இந்தச் சூழலில் ஐரோப்பிய நாடுகளின் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லாததால், உடன்பாட்டை கைவிடும்படி ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி மற்றும் அமைச்சர்களிடம், அந்நாட்டின் தலைவர் அயதுல்லா கொமேனி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகளுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும்‌ அவர் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS