பெண் பைலட் விமானத்தில் கிகி சேலஞ்ச் : வைரலாகும் வீடியோ 


பெண் பைலட் ஒருவர் பணிப்பெண் ஒருவருடன் விமானத்தின் அருகில் நடனமாடி கிகி சேலஞ்ச் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

கனடா நாட்டின் பாடகர் ஆப்ரே டிராக்கி கிரகாம் தமது ஸ்கார்பியன் என்ற இசை பாடல் தொகுப்பை அண்மையில் வெளியிட்டார். இந்தப் பாடல் தொகுப்பில் அடங்கிய இன் மை பீலிங்ஸ் என்ற பாடலில் இடம்பெற்றுள்ள கிகி ஐ லவ்யூ என்ற வரிகளை காரில் ஒலிக்கவிட்டு, கீழே இறங்கி நடனம் ஆடிவிட்டு பின்னர் காரில் ஏறவேண்டும் என்பதுதான் கிகி சவால்.

இந்த மோகம் அமெரிக்கா, மலேசியா, ஸ்பெயின் என பல நாடுகளில் பரவியுள்ளது. தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடி வீடியோ‌ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அதுவும் அப்போது வைரலானது.

இந்நிலையில் காருடன் நகர்ந்து கொண்டே நடனமாடும் கிகி சேலஞ்ச்சை பார்த்த அலிஜாண்ட்ரா என்ற பெண் பைலட் விமானத்திலிருந்து இறங்கி தன்னுடன் பணிபுரியும் பணிப்பெண்ணுடன் கிகி நடனத்தை ஆடியிருக்கிறார். விமானத்தின் அருகே நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்த அலிஜாண்ட்ரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்தக் காட்சி வைரலாகி வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS