அமலுக்கு வந்தது ரஷ்யா மீதான தடை


ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.

பிரிட்டனில் வசித்து வந்த முன்னாள் உளவாளி செர்ஜி ஸ்கிரிபாலையும் அவரது மகளையும் ரசாயன தாக்குதல் மூலம் கொல்வதற்கு, ரஷ்யா முயற்சி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா மீது அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்தது. அதன்படி ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ரஷ்யாவுக்கான நிதி உதவிகள் வழங்குவது, ராணுவ தளவாடங்களை விற்பது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் விண்வெளி துறையில் கூட்டுறவு, வர்த்தக விண்கலங்கள் தயாரிப்பு, அதன் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட உடன்பாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நலன் கருதி, ரஷ்யா மீது இத்தகைய தடைகளை விதித்திருப்பதாகவும், இந்தத் தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS