ஒரே நேரத்தில் 4 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்


தென் கொரியாவில் உள்ள தேவாலயத்தில் 64 நாடுகளை சேர்ந்த 4,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது.

64 நாடுகளை சேர்ந்த ஜோடிகள் இதில் பங்கேற்றனர். ஏற்கனவே திருமணம் ஆன ஜோடி‌கள் கூட ‌இந்தத் திருமண விழாவில் இணையத்தின் மூலம் கலந்துகொண்டனர். சுமார்190 நாடுகளை சேர்ந்த 28 ஆயிரம் தம்பதிகள் இந்த நி‌கழ்வுக்கு ‌வருகை‌ தந்தனர். இந்தத் தேவாலயத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. 1954 ஆம் ஆண்டு SUN MYUNG MOON ‌என்பவர் தேவாலயத்தை நிறுவினார். இவர் 2012ல் உயிரிழந்துவிட்ட நிலையில் அவரின் மனைவி ஹக் ஜா ஹன் மூன் தலைமையில் பல ஆயிரம் ஜோடிகளுக்கு ஆண்டுதோறும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

 

POST COMMENTS VIEW COMMENTS