இந்தியா-பாக். உறவை வலுப்படுத்த சீனா விருப்பம்


இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங், இந்தியா-பாகிஸ்தான் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்களை வரவேற்பதாக கூறியுள்ளார். 

இரு நாடுகளும் தங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தெற்காசிய மண்டல வளர்ச்சி, அமைதி ஆகியவற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் உறுதி பூண்டுள்ளதை சீனா நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நோக்கத்திற்காக சீனா ஆக்கப்பூர்வமான உதவியில் ஈடுபட விரும்புவதாகவும் லூ காங் கூறியுள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS