ஜப்பானில் அமைச்சர் ஜெயக்குமார்


ஜப்பானில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் சிறப்பு அழைப்பாளராக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்கியுள்ள 20ஆவது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், இந்தியா சார்பில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது ஜப்பானின் பாரம்பரிய நிகழ்ச்சியான பார்ரெல் தொடக்கத்தை (Barrel Opening) அவர் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயக்குமாருடன், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலாளர் கோபால், மீன்வளத்துறை இயக்குநர் சமீரன், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் ஜானி டாம் வர்க்கீஸ் ஆகியோரும் பங்கேற்றனர். 

POST COMMENTS VIEW COMMENTS