அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறியதாக ஒப்புதல்


அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோவன், அதிபர் தேர்தலின்போது பரப்புரைக்காக சட்டத்தை மீறி நிதியைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.

ட்ரம்பின் வழக்கறிஞராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர் மைக்கேல் கோவன். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, பரப்புரை தொடர்பான செலவுகள் மற்றும் நிதிகளை கவனித்து வந்தார். இவர் மீது வரி ஏய்ப்பு, வங்கி பண மோசடி, உள்பட பல்வேறு முறைகேடு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. மேலும் ட்ரம்புடனான உறவு குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க ஆபாச நடிகை டேனியல்ஸுக்கு, கோவன் பணம் வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, அதிபர் தேர்தலில் ‌சட்டத்தை மீறி, பரப்புரைக்கு நிதியைப் பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டார். 

Also Read -> பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி... மாணவர் மீது வழக்கு 

வேட்பாள‌ர் கேட்டுக் கொண்டதால், தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அந்த நிதியைப் பயன்படுத்தியதாகவும் கோவன் தெரிவித்தார். ட்ரம்புடன் தொடர்பு இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக பணம் அளித்த விவகாரம் குறித்தும் கோவன் முக்கிய சாட்சியம் அளித்துள்ளார். இதனால் அதிபர் ட்ரம்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதே சமயம் கோவன் ஒப்புக் கொண்ட விவகாரம் குறித்து ட்ரம்ப் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

POST COMMENTS VIEW COMMENTS