பறவையின் வாய்க்குள் தலையை விட்டு செல்ஃபி... மாணவர் மீது வழக்கு


நமீபியாவில் கூழைக்கிடா பறவையின் நீண்ட அலகுக்குள் தலையைவிட்டு செல்ஃபி எடுத்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நமீபியாவில் மிக நீண்ட கூர்மையான அலகு கொண்ட கூழைக்கிடா பறவைகள் பயணிகளின் படகில் வந்து அமர்ந்து பயணம் செய்தன. இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூவான் வாண்டென் என்ற மாணவர் பறவையின் அலகுக்குள் தனது தலையை விட்டு செல்ஃபி எடுத்துள்ளார். அப்போது கூழைக்கிடா பறவையும் அதற்கேற்றபடி அவரது தலையை கடிப்பது போன்று பாவனை செய்தது.

Read Also -> அதிபர் தேர்தலில் சட்டத்தை மீறியதாக ஒப்புதல்  

இந்நிலையில் பறவைக்கு நெருக்கமாக சென்று, அதனை துன்புறுத்தியதாக மாணவர் ஜூவான் மீது நமீபியா அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS