பிரசவத்திற்கு சைக்கிளில் வந்த பெண் அமைச்சர் - வைரலான போட்டோ


நியூசிலாந்தில் பெண் அமைச்சர் ஒருவர் பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர சைக்கிளில் வந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. 

நியூலாந்து நாட்டில் பெண்கள் துறைக்கான அமைச்சராக இருப்பவர் ஜூலி அன்னே ஜென்டர் கர்ப்பமாக இருந்துள்ளார். இதற்காக 6 வாரங்கள் தனது பணியில் இருந்து விடுப்பு எடுத்து வீட்டிலே இருக்கிறார். அவர் 42 வாரங்கள் ஆன நிறைமாத கர்ப்பினியாக இருந்துள்ளார். நேற்று தனது வீட்டில் இருந்து ஆக்லாந்தில் உள்ள மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சேர்வதற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனைக்கு செல்ல அவர் காரை பயன்படுத்தாமல் வழக்கம் போல் தனது சைக்கிளிலே சென்றுள்ளார். வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் அவர் சைக்கிளிலே பயணம் செய்துள்ளார்.

Read Also -> ‘பார்சலுக்கு பாத்திரங்களுடன் வந்தால் டிஸ்கவுண்ட்’ - தமிழக ஹோட்டல்கள் புது ஆஃபர் 

Read Also -> பாடப் புத்தகத்தில் மில்கா சிங்குக்கு பதில் ஹீரோ படம்: வெடிக்கும் சர்ச்சை! 

                      

மருத்துவமனைக்குள் செல்வதற்கு முன்பாக அதன் முன் சைக்கிளுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “அற்புதமான ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் மருத்துவமனைக்கு சைக்கிள் வந்ததுள்ளேன். எங்களுடைய காரில் போதுமான இடம் இல்லாததால் நானும் எனது கணவரும் சைக்கிளில் வந்தோம். சைக்கிளில் வந்ததும் எனக்கு மிகவும் நல்ல மனநிலையை ஏற்படுத்தியுள்ளது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் அவரது இந்த சைக்கிள் பயணத்தை பாராட்டியுள்ளனர். 38 வயதாகும் ஜென்டருக்கு இது முதல் குழந்தை. சைக்கிள் ஓட்டுவதில் ஆரம்பம் முதலே ஜென்டர் ஆர்வமுடன் இருந்துள்ளார். தன்னுடைய கர்ப்ப காலத்திலேயே சைக்கிளுடன் பல இடங்களுக்கு அவர் பயணம் செய்துள்ளார்.

               

அவ்வவ்போது சைக்கிளுடன் அவர் எடுத்த படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். சைக்கிள் பயணங்களில் பங்கெடுத்த படங்களும் அவரது இன்ஸ்டாகிராமில் உள்ளன. ஜென்டர், நியூசிலாந்தில் இணை போக்குவரத்து போக்குவரத்து அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

POST COMMENTS VIEW COMMENTS