புதிய பாகிஸ்தான் ! இம்ரான் அதிரடி பேச்சு


அண்டை நாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பின் முதன்முறையாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், அண்டை நாடுகளுடன் நல்லுறவு ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இம்ரான்கான் குறிப்பிட்டார். அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும் என்றும் இம்ரான் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசு 28 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கிறது என்றும் இதற்கு முந்தைய நவாஸ் ஷெரிஃப் கட்சியின் அரசுதான் காரணம் என்றும் இம்ரான்கான் குற்றஞ்சாட்டினார். 

             

பாகிஸ்தான் தற்போது மோசமான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் இதை திசை திருப்பாவிட்டால் பேரழிவு ஏற்படுவது நிச்சயம் என்றும் இம்ரான் வேதனையுடன் தெரிவித்தார். புதிய பாகிஸ்தான் காண தனது தலைமையிலான அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் இதன் முதல் கட்டமாக பிரதமருக்கான விலைமதிப்பு மிகுந்த புல்லட் புரூஃப் கார்களை விற்பதிலிருந்து இந்தப் பணி தொடங்கப்படும் என்றும் இம்ரான் தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS