கேரளாவுக்கு ரூ.35 கோடி அளிக்கும் கத்தார்


கேரள வெள்ளப்பாதிப்பு நிவாரணத்துக்காக ரூ.35 கோடியை கத்தார் அளிக்கிறது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மாநிலம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும், கூரை களி லும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 357  பேர் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்து உள்ளனர். இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

பல்வேறு தரப்பினர் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர். நடிகர், நடிகர்கள், மாநில அரசுகள் பண உதவியை வழங்கி வருகின்றன. இந்நிலையில் அரபு நாடுகளில் ஒன்றான கத்தார் ரூ.35 கோடியை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறது. கத்தார் பிரதமர் சேக் அப்துல்லா பின் நசீர் பின் கலிபா அல் தானி, இதைத் தெரிவித்துள்ளார். கத்தாரில் கேரளாவைச் சேர்ந்த ஏராளமானோர் பணியாற்றுக் கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

POST COMMENTS VIEW COMMENTS