இத்தாலியில் பாலம் இடிந்து பயங்கர விபத்து - 35 பேர் உயிரிழப்பு


இத்தாலியின் வடமேற்கில் உள்ளது ஜெனோவா நகரம். இது மலைகள் சூழ்ந்த பகுதிக்குள் இந்த நகரம் அமைந்துள்ளது. ஜெனோவா நகரின் மேற்கில் பிரபல தொழிற்பேட்டை அருகே அமைந்துள்ள நெடுஞ்சாலையில் இருக்கும் மோரான்டி என்னும் மேம்பாலத்தின் ஒருபகுதி திடீரென்று இன்று இடிந்து விழுந்தது.

இந்த மேம்பாலமானது ஒரு ஆறு மற்றும் சில சாலைகள் வழியாக செல்கிறது. இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் கீழே சென்ற பல வாகனங்கள் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில் 30 வாகனங்கள், சில டிராக்டர்கள், கட்டடங்கள் சிக்கி சேதாரமானது. 

இந்த விபத்தில் சுமார் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தின் போது 50-65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், இடியின் தாக்கம் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் சிலர் கூறுகின்றனர். அதனால் இயற்கை சீற்றத்தின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது.

POST COMMENTS VIEW COMMENTS