அடை மழையிலும் தடைபடாத அதிசய திருமணம் 


பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் மூழ்கிய பேராலயத்தில் இளம் தம்பதிகள் திருமணம் செய்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் ‌கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யாகி புயல் உருவாகி பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புலாகான் மாவட்டத்தில் உள்ள 24 வயதான ஜோபல் டெலோஸ் ஏஞ்செலஸ் என்பவர் தண்ணீரில் மூழ்கிய பேராலயத்தில் திருமணம் செய்து கொண்டார். மணக்கோலத்தில் வெள்ளத்தில் மிதந்துபடி வந்த தம்பதிகள் ஆலய வழிபாட்டிற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு வெள்ள நீரில் நடந்து சென்றனர். திருமணம் என்பது வாழ்வில் ஒரே ஒரு முறைதான் நடக்கும். மழை வெள்ளத்திற்காக அதை ஒத்திவைக்க கூடாது என்று தெரிவித்திருக்கிறார் மணமகன் ஜோபல்.


 

POST COMMENTS VIEW COMMENTS