சாதாரண குடிமகனை கரம்பிடிக்கும் ஜப்பான் இளவரசி 


ஜப்பான் இளவரசி மகோவை தொடர்ந்து மற்றொரு இளவரசியான அயகோவும் சாதாரண குடிமகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஜப்பான் இளவரசி அயாகோ சாதாரண குடிமகனை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ திருமண நிச்சயதார்த்தம் நேற்று டோக்கியோவில் உள்ள அரண்மனையில் நடைபெற்றது.

இளவரசி அயகோ தாய் ஹிசாகோவுடன், நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றார். மணமகன் மோரியா, திருமண உடை மற்றும் பரிசுப் பொருட்களை இளவரசி அயகோவுக்கு அனுப்பி வைத்தார். ‌அதனை இளவரசியின் தாயார் ஹிசாகோ முறைப்படி பெற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து இந்தத் திருமணம் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இளவரசி மகோ சாதாரண குடிமகனான கெய் கொமுரோவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். அவர்களது திருமணம் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS