இறந்த குட்டியோடு தாய் திமிங்கலம் நடத்திய பாசப் போராட்டம்


பிறந்தவுடன் உயிரிழந்த குட்டியை, தாய் திமிங்கலம் தொடர்ந்து 17 நாட்கள் தனது முதுகில் சுமந்தபடி திரிந்தது. 

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் அண்மையில் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்றது. பிறந்த சில நாட்களே ஆன இந்தக் குட்டி திடீரென உயிரிழந்தது. இதனால், சோகமடைந்த தாய் திமிங்கலம், குட்டியை சுமந்தபடி தொடர்ந்த 17 நாட்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளது. 

இதுபற்றி ஆய்வு நடத்திய கடல்வாழ் உயிரின ஆய்வாளர்கள், அந்தத் திமிங்கலம் 1,600 கிலோ மீட்டர் தூரம் வரை குட்டியை சுமந்தபடி நீந்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர். உயிரிழந்த குட்டியை பிரிய மனமில்லாமல், தாய் திமிங்கலம் 17 நாட்கள் வரை நடத்‌திய இந்தப் பாசப்போராட்டம், கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS