குப்பைகளை சுத்தம் செய்யும் காகங்கள் : ரொட்டி பரிசு


பிரான்ஸில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றை சுத்தப்படுத்தப்படுத்த காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் உள்ள 'பி டு ஃபூ' எனும் பூங்காவில் தரையில் போடப்படும் குப்பைகள், சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்ய அங்குள்ள 6 காகங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பூங்காவில் உள்ள குப்பைகளை சேகரித்து சிறிய அட்டைப் பெட்டிகளில் அவை போடுகின்றன. அப்படி ஒரு குப்பை துண்டை எடுத்துவந்து போடுவதற்கு காகங்களுக்கு ஒரு ரொட்டி துண்டு பரிசாக அளிக்கப்படுகிறது. இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காகவும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS