நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் காலமானார்!


நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் வி.எஸ்.நைபால் லண்டனில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.

மேற்கிந்திய தீவுகளில் உள்ள டிரினாட் நகரில் 1932-ம் ஆண்டு பிறந்தவர் வி.எஸ்.நைபால். முழுப் பெயர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால். இவரது தந்தை சீபிரசாத் நைபாலின் பெற்றோர் இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்கள். பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்த நைபால் லண்டனில் வசித்து வந்தார். 30-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய’ஏ ஹவுஸ் பார் மிஸ்டர். பிஸ்வாஸ்’ நாவல் பிரபலமான ஒன்று. 1971-ம் ஆண்டு ‘இன் ஏ ப்ரீ ஸ்டேட்’ என்ற புத்தகத்துக்காக புக்கர் விருது வழங்கப்பட்டது. 2001-ம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. 

இவர் முதல் மனைவி பேட் 1996-ல் மறைந்தார். அதன் பின் பாகிஸ்தான் பத்திரிகையாளர் நதிரா அல்வியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் 85 வயதான நைபால் லண்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானதாக அவர் மனைவி நதிரா அல்வி தெரிவித்துள்ளார்.

நைபாலின் மறைவுக்கு சர்வதேச எழுத்தாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS