“வீடு, நிலம் இழந்தோருக்கு தலா 10 லட்சம்” - பினராயி விஜயன்


கேரளாவில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று பார்வையிட்டார். அதன் பின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட அவர், மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், வீடு மற்றும் நிலங்களை இழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய் அளித்துள்ள பினராயி விஜயன், பொதுமக்கள் தங்களால் ஆன நிதியை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கேரளாவில் நீடிக்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல இடங்களுக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 

POST COMMENTS VIEW COMMENTS