விமானத்தை கடத்திய மெக்கானிக், லேண்டிங் தெரியாததால் வெடித்துச் சிதறியது!


விமானத்தைக் கடத்திய மெக்கானிக், அதை சரியாக கீழே இறக்கத் தெரியாததால் அந்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது.

அமெரிக்காவில் பிரபலமான விமான நிறுவனங்களில் ஒன்று, அலஸ்கா. சியாட்டில் நகரில் உள்ள சீ-டேக் விமான நிலையத்தில் இந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது விமான மெக்கானிக் ஒருவர், அந்த விமானத்தை திடீரென்று அனுமதியின்றி இயக்க ஆரம்பித்தார்.

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது தூரம் வானில் சென்ற அந்த விமானத்தை எப்படி இயக்க வேண்டும் என்பது அந்த மெக்கானிக்கிறகு முறையாக தெரியாது.  இந்நிலையில் இது தீவிரவாத செயலாக இருக்குமோ என சந்தேகித்த 2 ராணுவ விமானங்கள் அதை விரட்டி சென்றன.

அந்த விமானம் மேலும் கீழும் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து அதை வீடியோ எடுக்கத்தொடங்கினர். இதற்கிடையில் விமானத்தை தரையிறக்கத் தெரியாததால் அந்த விமானம் அருகிலுள்ள தீவில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தைக் கடத்திய மெக்கானிக் உயிரிழந்தார். 

இதை அலஸ்கா விமான நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

POST COMMENTS VIEW COMMENTS