ஆத்தாடி! 93 வயதில் மூதாட்டி பாராகிளைடிங் சாகசம்


தைவானில் 93 வயது மூதாட்டி துணிச்சலுடன் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

தைவானின் தென் கிழக்கு பகுதியில் உள்ள தைதுங் நகரம் பாராகிளைடிங் விளையாட்டுக்கு உகந்த பகுதியாக கருதப்படுகிறது. இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் பாராகிளைடிங்கில் பறந்து சென்று பொழுதைக் கழித்து வருகின்றனர். இந்நிலையில், 93 வயது மூதாட்டியான வூ ரூய் லின் என்பவரும், பாராகிளைடிங்கில் பறந்து செல்ல, அந்த விளையாட்டை நடத்தி வரும் நிறுவனத்திடம் கேட்டுள்ளார். முதலில் அதிர்ச்சி அடைந்த அந்நிறுவனம், மூதாட்டியின் ஆர்வத்தை பார்த்து, அதற்கு சம்மதித்தது.

அதன் பின் சிறப்பு ஏற்பாடுகளுடன், மூதாட்டி வூ ரூய் பாரா கிளைடிங்கில் பறந்து சென்று அனைவரையும் அசத்தினார். தவிர, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், இரண்டாவது முறையாக இப்படி பாராகிளைடிங் மூலம் விண்ணில் சிறகடித்து பறந்ததாக அவர் தெரிவித்தார். மேலும் நூறு வயதை எட்டும் போது மீண்டும் பாராகிளைடிங் செய்யப் போவதாகவும் அந்த மூதாட்டி கூறியது அனைவரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது.

POST COMMENTS VIEW COMMENTS