வறட்சியால் தவிக்கும் ஆஸ்திரேலியா


சுமார் 800 வருடங்களில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத வறட்சியை ஆஸ்திரேலியா சந்தித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள 8 ‌லட்‌சத்து 30‌0 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட விளைநிலங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.

மேலும்‌ நிலத்தடி நீரும் அதள பாதாளத்துக்கு சென்றிருப்பதால், பாசனத்துக்கு நீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்து போனதே இந்த வறட்சிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.‌‌ கடும் வறட்சி நிலவுவதால், அப்பகுதி மக்கள் உணவு இல்லாமல் பட்டினி கிடக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வறட்சியை சமாளிக்கும் வகையில் முதல் கட்டமாக 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS