இந்தோனேஷியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 82 ஆக உயர்வு


இந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்ததுடன், வீடுகளும் கட்டடங்களும் சேதமடைந்தன.

ரிக்டர் அளவுகோளில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோ மீட்டர் அடியில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டு சிறு நிலநடுக்கங்களும் நிகழ்ந்தன. இதைத்தொடர்ந்து 82 பேர் உயிரிழந்திருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. கடந்த வாரம் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

POST COMMENTS VIEW COMMENTS