அதிபர் நிகோலஸ் மதுரோவை குறிவைத்து தாக்குதல்


வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது  ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் இருந்து அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸில் அந்நாட்டு பாதுகாப்பு படையின் 81ஆவது ஆண்டு நிகழச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராணுவ வீரர்கள் முன்னிலையில் வெனிசுலா அதிபர் மதுரோ உரையாற்றி கொண்டிருந்தார். அப்போது, ஆயுதங்கள் தாங்கிய விமான மூலம் அதிபர் மதுரோ மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆளில்லா விமான தாக்குதலில் இருந்து அதிபர் மதுரோ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தாக்குதலை அடுத்து நிகழ்ச்சி உடனடியாக ரத்து செய்யப்பட்டது.

மேலும் ஆளில்லா விமான தாக்குதலில் அதிபர் மதுரோவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், ஏழு ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு அமைச்சர் ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினர் தான் காரணம் என வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS