நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 18 பேர் உயிரிழப்பு


ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் இரு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளாயின. இதில் 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாஸ்கோவில் இருந்து வடக்கு சைபீரியாவில் உள்‌ள எண்ணெய் வயலுக்கு 15 பயணிகள் மற்றும் 3 சிப்பந்திகளுடன் எம் ஐ - 8 ரக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே ‌வந்த மற்றொரு ஹெலிகாப்டர் மீது மோதி கீழே விழுந்து நொறுங்கியது. 

                  

இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணித்த 18 பேரும் ச‌ம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான மற்றொரு ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ‌வானிலை சீராக இருந்த சமயத்தில் இந்த விபத்து நடந்திருப்பது, ரஷ்ய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS