ஜார்ஜியாவில் வித்தியாசமான செஸ் போட்டி


ஜார்ஜியாவில் நடந்த சதுரங்க போட்டியில் வழக்கத்துக்கு மாறாக, காய்களுக்கு பதில் மது கோப்பைகளை வைத்து இரு முன்னாள் சாம்பியன்கள் விளையாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

 

வெள்ளை காய்களுக்கு பதில், வெள்ளை மது ஊற்றப்பட்ட கோப்பையும், கறுப்பு காய்களுக்கு பதில், சிவப்பு மது ஊற்றப்பட்ட கோப்பையும் வைத்து இருவரும் விளையாடியதை, திரளானோர் ஆர்வமுடன் ரசித்தனர். இறுதியில் போட்டி சமனில் முடிந்தாலும், ஒவ்வொரு காயும் வெட்டப்படும்போது, இருவரும் பரஸ்பரம் மது கோப்பையை ஏந்தி ஓயினை ருசி பார்த்தது, பார்வையாளர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியது. வரும் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை ஜார்ஜியாவின் கடற்கரை நகரமான பட்டூமியில் தொடங்கவுள்ள 43 ஆவது உலக சதுரங்கப் போட்டியை முன்னிட்டும், இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

POST COMMENTS VIEW COMMENTS