ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை தொட்ட ஆப்பிள்..!


உலகிலேயே ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்பை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஆப்பிள் நிறுவ்னம் பெற்றுள்ளது. 

ஆப்பிள் நிறுவனப் பங்குகள் 201.05 டாலர் என்ற அளவை எட்டியபோது அந்த நிறுவனத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலர் மதிப்புள்ளதாக உயர்ந்தது. 42 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம், கடந்த 1997ம் ஆம் ஆண்டில் திவாலாகும் நிலையில் இருந்தது. அந்த நிறுவனத்தை தொடங்கிய இருவரில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸை மீண்டும் நிறுவனத்திற்குள் கொண்டு வந்ததே நிறுவனம் மீண்டும் வளர்ச்சியடைய காரணமாக இருந்தது. மக்கள் மத்தியில் பிரபலமான ஐபோன், ஐபேட் போன்றவற்றை அறிமுகப்படுத்திய பெறுமை ஸ்டீவ் ஜாப்ஸையே சேரும் இந்த நவீன கருவிகளே ஆப்பிளின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன.

 

POST COMMENTS VIEW COMMENTS