விமானத்தில் நடனமாடிய ஊழியர் : வைரலாகும் வீடியோ


அமெரிக்காவில் விமான ஊழியர் ஒருவரின் நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்க விமான நிறுவனங்களான, வர்ஜின் அமெரிக்காவும், அலாஸ்கா ஏர்லைன்ஸும் ஒன்றிணைந்துள்ளன. இனி அலாஸ்கா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் இந்த நிறுவனம் செயல்பட உள்ளது. இந்தச் சூழலில் வர்ஜின் அமெரிக்கா என்ற பெயரில் விமானம் இறுதி முறையாக நியூயார்க்கில் இருந்து புறப்பட்டது. அப்போது பாதுகாப்பு அம்சங்கள் குறித்து புகழ் பெற்ற பாடலை பாடி விமான ஊழியர் மிக்கி டாங்கோ, நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

POST COMMENTS VIEW COMMENTS