இஸ்லாமாபாத்தில் குடியேறும் இம்ரான் கான்


பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கான் விரைவில் இஸ்லாமாபாத்தில் உள்ள இல்லத்தில் குடியேறப்போகிறார். 

பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கான்  "பிரதமரின் இல்லத்தில் நான் வசிக்க மாட்டேன்" என ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், அமைச்சர்களுக்கான குடியிருப்பில் உள்ள ஒரு இல்லத்தில் இம்ரான் குடியேறுவார் எனத் தெரிகிறது.

இதுதான் அவரது அதிகாரப்பூர்வ இல்லமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது இம்ரான் வசிக்கும் வீட்டில் அவருக்கு போதிய பாதுகாப்பு இருக்காது எனக் கருதப்படுவதால் விரைவில் அவர் இங்கு குடியேற இருக்கிறார். பாகிஸ்தான் பிரதமராக வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி இம்ரான் கான் பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS