மீண்டும் ஏவுகணை தயாரிப்பில் வடகொரியா? - அமெரிக்கா சந்தேகம்


அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி, வடகொரியா மீண்டும் புதிதாக ஏவுகணை‌த் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

‌வடகொரியா தலைநகர் பியாங்யாங் அருகே உள்ள புறநகர் பகுதியில் உளவு செயற்கைகோள் மூலம் கண்கா‌ணித்ததில், ஏவுகணை தயாரிப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் வடகொரிய மற்றும் அமெரிக்க அதிபர்களிடையே நடந்த வரலாற்று சிறப்புமிக்க ச‌ந்திப்புக்குப் பின், இரு நாட்டுக்கும் ‌இடையே நிலவி வந்த மனக்கசப்பு மறைந்தது. 

(தொடர்புடைய செய்தி : அமெரிக்கா- வடகொரியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து)

மேலும் அணு ஆயுதமற்ற பிராந்தியமாக கொரிய தீபகற்பத்தை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி, வடகொரி‌யா மீண்டும் ஏவுகணைத் தயாரிப்புக்கான பணி‌ளை தொடங்கியுள்ள தகவல் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS