வெற்றி பெற்ற இம்ரானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து


பாகிஸ்தான் தேர்தலில் பெருமளவில் வெற்றி பெற்றுள்ள இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 25ம் தேதி மொத்தமுள்ள 272 தொகுதிகளில் 270 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் மரணத்தால் தேர்தல் ரத்தானது. இப்போது 270 தொகுதிகளுக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன.இந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

 முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் (பி.டி.ஐ.) கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் ஆட்சியமைக்கவுள்ளார். இந்நிலையில் இம்ரான்கானை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி, பாகிஸ்தானில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் அண்டை நாடுகளுடனான அமைதி மற்றும் வளர்ச்சி குறித்தும் மோடி பேசினார்.

POST COMMENTS VIEW COMMENTS