இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: உயிரிழப்பு 14 ஆக உயர்வு


இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக விடுமுறையை கழிக்க பாலி, லம்பாக் உள்ளிட்ட தீவுகளில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடையே சுனாமி பேரலை குறித்த அச்சம் நிலவியது. இதனிடையே நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

2004-ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனை தொடர்ந்து உருவான சுனாமியால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS