சிரியாவில் தற்கொலைப் படை தாக்குதல் - 220 பேர் பலி


சிரியாவின் தெற்கு பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 220 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு மாகாணத்தின் சுவேய்டா பகுதியின் சில இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வன்முறைக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 4 பேர் சுவேய்டா நகரில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள சிறிய கிராமங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

இந்த தாக்குதலில் 127 அப்பாவி பொதுமக்கள் உட்பட 221 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 94 பேர் அரசுக்கு ஆதரவான பாதுகாப்பு படை வீரர்கள்.

POST COMMENTS VIEW COMMENTS