கும்ப மேளாவுக்கு வாருங்கள் ! உகாண்டா இந்தியர்களுக்கு பிரதமர் அழைப்பு


உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார். 

ஆப்பிரிக்க நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ருவாண்டா பயணத்தை முடித்து கொண்டு நேற்று மாலை உகாண்டா சென்றார். தலைநகர் கம்பாலாவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டின் அதிபர் யோவேரி முசிவேனியை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து கம்பாலாவில் நடைபெற்ற உகாண்டா வாழ் இந்தியர்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு நிறுவப்பட்டுள்ள, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை மோடி திறந்து வைத்தார். 

பின்னர் உகாண்டா நாட்டு மொழியான லுவாண்டா, குஜராத்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வணக்கம் சொல்லி பிரதமர் உரையை தொடங்கினார். வரும் ஜனவரி மாதம் அலகாபாத்தில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திப்பு மற்றும் கும்ப மேளா நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்புவிடுத்தார். இதைத் தொடர்ந்து இன்று உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.


 

POST COMMENTS VIEW COMMENTS