யுஏஇ-ல் சட்டவிரோதமாக உள்ள இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு


ஐக்கிய அரசு எமிரேட்டுகளில் (UAE) சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் பொதுமன்னிப்பு பெறுவதற்கு இந்தியத் தூதரகம் உதவி செய்கிறது.

ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் (UAE) விசா காலம் முடிந்த பிறகும் தங்கியுள்ளவர்களுக்கும், முறைகேடாக நாட்டுக்குள் நுழைந்தவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக உதவி செய்ய அபுதாபியிலும், துபாயிலும் அடுத்த வாரத்திலிருந்து உதவி முகாம்கள் அமைக்கப்படும் என்று அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான 90 நாட்களுக்குள் எந்தவித தடையும், தண்டனையும் இல்லாமல் வெளியேற இந்தியத் தூதரகம் உதவி செய்யும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

POST COMMENTS VIEW COMMENTS