மேடைக்கு ஓடி சென்று பாடகரை கட்டிப்பிடித்த சவுதி ரசிகை கைது!


மேடையில் பாடிக்கொண்டிருந்த பாடகரை ஓடிப்போய் கட்டிப்பிடித்த இளம் பெண் கைது செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. கேளிக்கை நிகழ்ச்சிகளில் பெண்கள் பங்கேற்கவும் விளையாட்டு போட்டிகளை பெண்கள் நேரில் சென்று பார்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் கார் ஓட்டவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சவுதி அரேபியாவின் மேற்கு பகுதியில் டைஃப் நகரத்தில் பிரபல உருது பாடகர் மஜித் அல் மொஹண்டிஸின் இசை நிகழ்ச்சி நடந்தது. பாடல் இளவரசன் எனப்படும் இவரது பாடல்கள் அங்கு பிரபலம். ஈரான் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி குடியுரிமையும் பெற்றவர். 
மொஹண்டிஸில் பாடலை கூட்டத்தில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த இளம் பெண் ஒருவர், அவர் பாடிக்கொண்டிருந்தபோது ஆர்வ மிகுதி யால் நேராக, மேடைக்கு ஓடினார்.

பாடகரை திடீரென்று கட்டிப்பிடித்தார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள் பாதுகாவலர்கள் ஓடி வந்து அந்தப் பெண்ணை அவரிடம் இருந்து இழுத்து வெளியே போக வைத்தனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைர லானது.

இந்நிலையில் அந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் தனக்கு சொந்தமில்லாத ஆணுடன் ஒரு பெண் பொது இடங்களில் பேச அனுமதி இல்லை. இந்நிலையில் இப்படி பொது இடத்தில் கட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS