ஸ்பெயினில் களைகட்டிய காளை விரட்டுத் திருவிழா: 4 பேர் கவலைக்கிடம்


ஸ்பெயினில் நடந்த காளை விரட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் உள்ள பாம்ப்லோனா என்ற இடத்தில் பாரம்பரிய காளை விரட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 875 மீட்டரில் குறுகிய தெருவிற்குள் ஓடவிடப்பட்ட காளைகளை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். இந்தப் போட்டிகளில் காளைகள் முட்டியும் மிதிபட்டும் பலர் காயமடைந்தனர். ஒன்பது நாட்களுக்கு நடத்தப்படும் இந்தப் போட்டியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதில் காளைகள் முட்டியும் ஒருவரும், கூட்ட நெரிசலில் சிக்கி மிதிபட்ட 3 பேரும் கவலைக்கிடமாக உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்கள் 4 பேரும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS