புக்கட் தீவில் படகு கவிழ்ந்து 41 பேர் பரிதாப பலி: தாய்லாந்தில் சோகம்!


தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. 15 பேரை காணவில் லை.

சுற்றுலாவை நம்பியுள்ள நாடு தாய்லாந்து. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள பட்டாயா, ஜியாங் மாய் மற்றும் புக்கட், அங்குள்ள ஜேம்ஸ்பாண்ட் தீவு ஆகியவை பிரபலமான சுற்றுலா தளங்கள். இங்கு ஏராளமான தமிழ்த் திரைப்படங்களின் பாடல் காட்சிகள் படமாகியுள்ளன. புக்கட், தெற்கு தாய்லாந்தில் அந்தமான் கடற்பகுதியில் உள்ளது. இங்குள்ள ஜேம்ஸ்பாண்ட் தீவு உட்பட பல இடங்க ளுக்கு படகில் குகைகளுக்குள் சுற்றுலா பயணிகள் சென்று வருவார்கள். 

கடந்த வியாழக்கிழமை மாலை 105 பேருடன் ஒரு படகு புக்கட் தீவில் சென்றுகொண்டிருந்தது. இதில் 93 சீன சுற்றுலா பயணிகளும் தாய்லாந் தைச் சேர்ந்த 12 பணியாளர்களும் இருந்தனர். இந்தப் படகு திடீரென்று கவிழ்ந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறினர். சிலர் கடலுக்குள் விழுந்தனர். உடனடியாக மீட்பு படையினர் வந்து கடலில் விழுந்தவர்களை மீட்டனர். இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள் ளது. இன்னும் 15 பேரை காணவில்லை. 49 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துக்கு படகின் கேப்டன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தாய்லாந்து குகையில் 12 சிறுவர்கள் சிக்கியுள்ள விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் மேலும் சோகத்தை அங்கு ஏற்படுத்தியுள்ளது.
 

POST COMMENTS VIEW COMMENTS