மெக்சிகோவில் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர் வெற்றி


மெக்சிகோ அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் மேனுவல் லோபஸ் வெற்றி பெற்றுள்ளார்.

மெக்சிகோவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் Andrés Manuel López Obrador வெற்றி பெற்றுள்ளார். நீண்ட காலமாக மெக்சிகோவை ஆண்டு வந்த கட்சிகளை விடுத்து மாற்றம் என்ற முழக்கத்தை முன் வைத்து போட்டியிட்ட மேனுவல் லோபஸை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகயுள்ளது.

இவரை எதிர்த்து போட்டியிட்ட Ricardo Anaya மற்றும் Jose Antonio Meade ஆகியோர் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மேனுவல் லோபஸ் அதிபராக பதவி ஏற்பதன் மூலம் மெக்சிகோவில் இடதுசாரிகள் ஆட்சி அமைய உள்ளது. ஊழலை ஒழிப்போம், சமத்துவத்தை ஏற்படுத்துவோம், வறுமையை அழிப்போம் என்பன போன்றவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக முன் வைத்த மேனுவல் லோபெஸ், மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் இதனை கொண்டாடி வருகின்றனர். மேனுவல் லோபெஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS