பாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்


சவுதியில் பெண் பாடகர் ஒருவர் மகிழ்ச்சிப்பொங்க பாடல் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு இருந்த கடுமையான கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கார் ஓட்ட பெண்களுக்கு அனுமதி வழங்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து ஆண்களுக்கு நிகராக பெண்கள் பலரும் சுதந்திரமாக வாகனங்களை ஓட்டி வருகின்றனர். 

இந்நிலையில், சவுதியைச் சேர்ந்த பெண் பாடகி ஒருவர், பெரும் மகிழ்ச்சியோடு பாட்டு பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகும் இவ்வீடியோவை இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

POST COMMENTS VIEW COMMENTS