மைக்கேல் ஜாக்சனின் தந்தை மறைவு


பாப் இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் காலமானார். 

பாப் இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தந்தை ஜோ ஜாக்சன். 89 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை அவரது பேரன்களான ரேண்டி ஜாக்சனும், தாஜ் ஜாக்சனும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அவர் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என தாஜ் ஜாக்சன் டிவிட்டரில் கூறியுள்ளார். மிகவும் கண்டிப்பான தந்தையாக அறியப்பட்ட ஜோ ஜாக்சன் தனது குழந்தைகளை கொண்டு தி ஜாக்சன் 5 இசைக்குழுவை உருவாக்கினார். இந்த இசைக்குழு மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த குழுவில் இருந்தே மைக்கேல் ஜாக்சன் தனது இசைப் பயணத்தை தொடங்கினார். 

ஆனால் தந்தையின் கண்டிப்பு மைக்கேல் ஜாக்சனுக்கு கால்மெல்லாம வலியாகவே இருந்தது. தனது தந்தை தம்மை பெல்டால் அடித்து துன்புறுத்தியது குறித்து மைக்கேல் ஜாக்சன் பலமுறை வெளிப்படையாக பேசி உள்ளார். தனது தந்தையை மன்னித்துவிட்டதாக கூறியிருந்த மைக்கேல் ஜாக்சன், கடைசிவரை அவரை தமது உயிலிலிருந்து நீக்கியே வைத்திருந்தார்.

POST COMMENTS VIEW COMMENTS