அமெரிக்காவின் முடிவால் இந்தியாவுக்கு நெருக்கடி


ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்‌ளிட்ட நாடுகளுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது.

ஈரான் அரசுடன் மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த மே மாதம் அமெரிக்கா விலகியது. இதையடுத்து ஈரானுக்கு நெருக்கடி தரும் நோக்கில் அந்நாட்டுடன் வர்த்தக உறவுகளை துண்டித்துக்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்தது. தவறும் பட்சத்தில் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் அமெரிக்கா கூறியிருந்தது.

ஈராக், சவுதி அரேபியாவுக்கு அடுத்து ஈரானிடமிருந்துதான் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெயை வாங்குகிறது. இந்நிலையில் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உள்‌ளிட்ட நாடுகளுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறிவிட்டது. தங்கள் அறிவுறுத்தலை மீறி வரும் நவம்பர் 4ம் தேதிக்கு பின்னரும் இறக்குமதி செய்தால் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. தற்போது அமெரிக்கா கொடுத்துள்ள நெருக்கடியால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கச்சா எண்ணெய் விவகாரம் குறித்து அமெரிக்க அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

POST COMMENTS VIEW COMMENTS