ட்ரம்பின் செய்தித்தொடர்பாளரா..?: ‘வெளியே போ’ என்ற கடை உரிமையாளர்..!


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் பணியாற்றுகிறார் என்ற காரணத்துக்காக, வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தி ரெட் ஹென் லெக்ஸ் எனும் உணவகத்துக்கு வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சாரா சாண்டர்ஸ் மற்றும் அரவது குடும்பத்தினரை வெளியேறுமாறு உணவகத்தின் உரிமையாளர் ஸ்டீபன் வில்கின்சன் கூறியுள்ளார். 

                 

மனிதாபிமானமற்ற மற்றும் நியாயமற்ற நிர்வாகத்தில் சாரா சாண்டர்ஸ் பணியாற்றுகிறார் என தான் கருதுவதாகவும் உணவகத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS