மகள் கார் ஓட்ட இளவரசர் ரசிக்க !


உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான சவுதி அரேபிய இளவரசர் அல்வாலித் பின் தலால் தனது மகள் கார் ஓட்டும் காட்சியை வெளியிட்டுள்ளார். 

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும் ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையான சவுதி அரேபிய இளவரசருமான அல்வாலித் பின் தலால், தனது மகள் ரீம் நள்ளிரவில் கார் ஓட்டிய வீடியோவை வெளியிட்டார். அல்வாலித் பின் தலால் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்தார். பின் இருக்கையில் இளவரசரின் பேத்திகளும் பயணித்தனர். அந்த வீடியோ பதிவில் பேசிய அல்வாலித் பின் தலால், சவுதி அரேபிய நாடு 21ஆம் நூற்றாண்டில் நுழைந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தார். பெண்கள் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை கொண்டுவந்துள்ள பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தனது நன்றியையும் வாழ்த்துகளையும் இளவரசர் அல்வாலித் பின் தலால் தெரிவித்துக்கொண்டார்.
 

POST COMMENTS VIEW COMMENTS