ஸ்பெயின் கடற்பகுதியில் சிக்கித் தவித்த 800 அகதிகள் மீட்பு


ஸ்பெயின் நாட்டு கடற்பகுதியில் சிக்கித்தவித்த அகதிகள் 800 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு மத்திய தரைக்கடல் வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக இடம்பெயர்ந்து வந்துள்ளனர். சுமார் நூறு கிலோமீட்டர் கடல்மைல் பயணத்தை மேற்கொண்ட இவர்களின் படகுகள் ஸ்பெயின் நாட்டு கடற்பகுதியில் சிக்கிக்கொண்டன. 

தகவலறிந்த ஸ்பெயின் கடற்படை வீரர்கள் மீட்புப்பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர். கடலில் தவித்துக்கொண்டு இருந்தவர்களில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியோரை மீட்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

POST COMMENTS VIEW COMMENTS