''வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பை தடுக்கவேண்டும்'' - நிதியமைச்சருக்கு கடிதம் 


ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியது இந்திய சிறு வணிகத் துறையை புற்றுநோயை போன்று பாதிக்கும் என அகில இந்திய வணிகர் கூட்டமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் பியுஷ் கோயலுக்கு வணிகர் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியுள்ளது. இது இந்திய சிறு வணிகத் துறையை புற்றுநோயை போன்று பாதிக்கும் என தெரிவித்துள்ளது. வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட் இணைப்பு என்பது அன்னிய முதலீட்டு விதிகளுக்கு எதிரானது என்ற நிலையில் அதைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலை தருவதாக வணிகர் கூட்டமைப்பின் செயலாளர் பிரவீன் கண்டேல்வால் தெரிவித்துள்ளார். 

அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காமலிருந்தால் அமேசான், அலிபாபா போன்ற சர்வதேச ஜாம்பவான்கள் இந்திய நிறுவனங்களை வாங்கி சிறு வணிகத் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார்கள் என்றும் கண்டேல்வால் கவலை தெரிவித்துள்ளார்.
 

POST COMMENTS VIEW COMMENTS