விண்வெளி ஓடத்தால் கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சி‌உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் நகரத்தின் மேல் தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை பறக்கவிட்டு ரஷ்யா அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கால்பந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், ரஷ்யா தனது சோயுஸ் விண்வெளி ஓடத்தை வானில் பறக்கவிட்டது. பார்ப்பதற்கு பறக்கும் தட்டுப் போல அந்த விண்வெளி ஓடம் இருந்ததாலும், கண்களை கூசச் செய்யும் அளவுக்கு மிகுந்த பிரகாசத்துடன் ஒளிர்ந்ததாலும், அதைக் கண்ட மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். வேற்றுக்கிரகவாசிகளின் வாகனமாக இருக்குமோ என அனைவரும் பீதியடைந்திருந்தனர். எனினும் சற்று நேரத்துக்குள் அது விண்வெளி ஓடம் என்று ரஷ்ய அரசு அறிவித்தது. அதன் பிறகே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். 

POST COMMENTS VIEW COMMENTS