ஜப்பானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி, 41 பேர் படுகாயம்!


ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். 41 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிகிறது.

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ளது ஓசாகா நகரம். அழகான இந்த நகரத்தில் ஏராளமான திரைப்படங்களின் ஷூட்டிங் நடப்பது வழக்கம். தமிழில் விஜய்யின் ’ஜில்லா’ உட்பட சில திரைப்படங்களின் பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு இங்கு நடந்துள்ளது.

இந்த நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி யுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் குலுங்கின. சில வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 9 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பேர் படுகாயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக புல்லட் ரயில் உட்பட பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

POST COMMENTS VIEW COMMENTS