“பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?” ஊடகங்களில் பரவும் செய்தி


விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இருப்பதாக தற்போது ஊடகங்களில் வேகமாக செய்தி பரவி வருகிறது.

விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு தலைவராக இருந்தவர் பொட்டு அம்மான் என்கிற சண்முகலிங்கம் சிவசங்கர். விடுதலைப் புலிகளின் மூளையாகச் செயல்பட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான அவர், முக்கிய திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக பார்க்கப்பட்டவர் பொட்டு அம்மான். 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிப் போரின் போது பொட்டு அம்மான் இறந்துவிட்டதாக அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஆனால், பிரபாகரன் இறந்துவிட்டதாக உடலைக் காட்டிய இலங்கை ராணுவத்தினர், பொட்டு அம்மான் இறந்துவிட்டார் என்பதற்கு சாட்சியை காட்டவில்லை. இதனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்கிற செய்தி வலம் வந்துகொண்டே இருக்கின்றன. 

இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறிய அந்த நபர் பொட்டு அம்மான் தான் என்று கூறப்படுகிறது.
 

POST COMMENTS VIEW COMMENTS