அமெரிக்க பொருட்களுக்கு வரி - சீனா பதிலடி


அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. 

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் கார் உள்ளிட்ட 800க்கும் அதிகமான முக்கியமான பொருட்களுக்கு 25 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்திருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 659 பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை சீனா விதித்துள்ளது. 

முன்னதாக சீனா முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும் அறிவுசார் சொத்துரிமை திருட்டுகளிலும் சீனா ஈடுபடுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து சீன பொருட்களுக்கு வரியை அதிகரிப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார். 

இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான வர்த்தக கசப்புணர்வை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்த நிலையில், திடீரென இத்தகைய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா - சீனா இடையிலான இந்த வர்த்தகப் போர் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் பாதிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது

POST COMMENTS VIEW COMMENTS