சீனாவில் மீண்டும் ஒரு கண்ணாடி பாலம்


சீனாவில் மீண்டும் ஒரு புதிய கண்ணாடி பாலம் திறக்கப்பட இருக்கிறது. சீனாவின் கண்ணாடி பாலங்கள் மிகப் பிரபலமானவை. மலைக்குன்றுகளுக்கு இடையே கண்ணாடி பாலங்களை அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு திகிலூட்டும் அனுபவத்தை அளிக்கிறது சீன சுற்றுலாத் துறை. அந்த வகையில் ஹெனான் மாகாணத்தில் FUXI மலைப்பகுதியில் புதிதாக கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. 

சில தினங்களில் திறக்கப்படும் இந்த பாலம் சுற்றுலா பயணிகளுக்கு புதியதொரு அனுபவத்தை தர காத்திருக்கிறது. ஆயிரத்து 181 அடி உயரத்தில் 3 ஆயிரம் டன்கள் இரும்பு கம்பிகளால், உடையாத கண்ணாடிகளை கொண்டு பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கண்ணாடி பாலம்,முக்கிய சுற்றுலாத்தலமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

POST COMMENTS VIEW COMMENTS